மறுவாழ்வுக்கான அடையாள அட்டை வழங்க

மலம் அள்ளும் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களின் மறுவாழ்வுக்கான அடையாள அட்டை வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவின் விசாரணையில் கோரிக்கை குறித்து மதுரை ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், விருதுநகர் ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை, விருதுநகரில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து இதுவரை முறையாக கணக்கெடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலம் அள்ள தடை, மறுவாழ்வு வழங்கும் சட்டத்தின்படி, மலம் அள்ளுவோரை கண்டறிந்து உரிய அடையாள அட்டை வழங்குக என்று கூறிய நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு ஆணையிட்டு வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது

Leave a Reply

Your email address will not be published.