செந்தில் பாலாஜியின் நீதிமன்ற
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 55ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டர். கடந்த ஆக.8ஆம் தேதி செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு பதிவை அமர்வு நீதிமன்றம் தொடங்கியது. வங்கி தலைமை மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணைக்காக வழக்கு ஆக.22-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.