அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்திய 3 கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல்
தொடுகாட்டில் பல ஆண்டுகளாக அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்திய 3 கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அனுமதியின்றி வரி செலுத்தாமல் பல ஆண்டாக 30 மேற்பட்ட கம்பெனிகள் செயல்படுவதாகவும், வரி செலுத்தாததால் அரசுக்கு ரூ.34 கோடி இழப்பு என தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2 கம்பெனிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தியதால் அதிகாரிகள் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்திய 3 கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.