இந்திய வானிலை ஆய்வு மையம்

மேற்குவங்கம், வங்கதேசத்தை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் நோக்கி நகரும். இதனால் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 12 – 20 செ.மீ மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆக.16, 17 நாட்களில் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஆக.18, 19 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் ஆக.18, 19 ஆகிய நாட்களில் 7 – 11 செ.மீ. மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.