விசேஷ நாட்களை முன்னிட்டு பூ
மாட்டுதாவணியில் விசேஷ நாட்களை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகை ரூ.900-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக பூக்களின் வரத்து அதிகரித்து இருந்ததால் பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. ஒரு கிலோ மல்லி ரூ.300ல் இருந்து ரூ.900-க்கும், முல்லை ரூ.600-க்கும், பிச்சி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.700க்கும், அரளி கிலோ ரூ.300-க்கும், சம்மங்கி ரூ.200-க்கும், பட்டன், பன்னீர் ரோஸ் ரூ.150-க்கும் விற்பனையாகி வருகிறது.