பூங்காவில் உள்ள உணவகத்தில் திடீரென தீ
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் குழந்தைகள் விளையாட்டு பூங்காவில் கடும் தீ விபத்து ஏற்பட்டது. பூங்காவில் உள்ள உணவகத்தில் திடீரென தீ பற்றியது. தீ விபத்தில் உணவகம் முற்றிலும் எரிந்து சேதமாகியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையின்ர கடும் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் என தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.