சிறப்பு ஏசி ரயில் இயக்கப்படும்
நாளை சென்னை – நாகர்கோவில் இடையே சிறப்பு ஏசி ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நாளை இரவு 11.30 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் புதன்கிழமை நண்பகல் 12.30க்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் 15-ம் தேதி நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 3.50க்கு புறப்படும் ரயில் வெள்ளி காலை 5.10க்கு ஆவடி வரும்.ஏ.சி. சிறப்பு ரயிலில் 14 ஏசி 3 டயர் எகானமி பெட்டிகளும், 2 சரக்கு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், நாளை மற்றும் 21ம் தேதி சென்னை சென்ட்ரல் – கொச்சுவேலி இடையே ஏசி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் செய்யப்பட உள்ளது.