ஆன்லைன் மோசடி கும்பல் அட்டூழியம்
சென்னையில் ஆன்லைன் மோசடி கும்பல் அட்டூழியம் 4 பேரிடம் பணத்தை சுருட்டி கைவரிசை காட்டியுள்ளது. சவுகார்பேட்டையைச் சேர்ந்த மதன் சிங் என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.78 ஆயிரம் திருட்டு போனது. மேலும், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் தணிகாச்சலம் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.46 ஆயிரம் திருட்டு போனது.