செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும்

செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் தொடர்ந்து தாமதமாக வருவதாக பயணிகள் புகார் எழுந்துள்ளது. நீண்ட நேரத்துக்கு பிறகு 2 நடைமேடைகளில் மின்சார ரயில்கள் வருவதால் ஓடிச்சென்று ஏறுவதில் சிரமம் எனவும் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 45 நிமிடங்களாக மின்சார ரயில்கள் வராததால் ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருக்கின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.