ஏஐடியூசி தொழிற்சங்க முயற்சியால் 8 லட்சம்
நிலச்சரிவு, பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு புதுச்சேரி ஏஐடியூசி தொழிற்சங்க முயற்சியால் 8 லட்சம் மதிப்பிலான பொருட்களும், 1 லட்சம் பணமும் கொடுக்கப்படுகிறது
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு, பெரும் வெள்ளத்தால் 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து, வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து ஆயிரக்கணக்கான மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் பெருமளவு தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களும், சாதாரண ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் இருந்து வருகிறார்கள். இந்த மக்களுக்கு உதவிட ஏஐடியூசி அகில இந்திய தலைமையும், கேரள மாநில ஏஐடியூசியும் வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்று ஏஐடியூசி புதுச்சேரி மாநில குழு சார்பில் புதுச்சேரியில் பெரிய மார்க்கெட், சண்டே மார்க்கெட், சாலையோர கடைகளிலும் நிதி, பொருட்கள் கடந்த ஒரு வார காலமாக வசூலிக்கப்பட்டது. ஏஐடியூசி வேண்டுகோளை ஏற்று மனமுவந்து நிதி பொருட்களை தாராளமாக அள்ளிக் கொடுத்தார்கள். பெறப்பட்ட நிதி ஒரு லட்சமும், பொருட்கள் அனைத்தும்
மளிகை பொருட்கள்:
அரிசி,கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து, பூண்டு, சமையல் எண்ணெய், சக்கரை, உப்பு, மஞ்சள் தூள், ரவை, கோதுமை.
துணி வகைகள்:
புடவை, ஜாக்கெட் கைலி, சட்டை, டி -சர்ட், பாய், தலையணை,
போர்வை, துண்டு, சுடிதார், சிறுவர்களுக்கான துணி வகைகள்.
வீட்டு உபயோக பொருட்கள்:
வாளி,மக்கு, பிரெஷ், பல்பொடி, துணி சோப்பு, குளியல் சோப்
ஆகிய 8 லட்சம் மதிப்பிலான பொருட்களை லாரி மூலம் ஏற்றி இன்று (12-08-2024) புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் K.சேது செல்வம், ஏஐடியூசி மாநில தலைவர் I.தினேஷ்பொன்னையா, பெரிய மார்க்கெட் சங்க கௌரவ தலைவர் MS.சுப்பிரமணி தலைமையில் வயநாட்டில் உள்ள ஏஐடியூசி தொழிற்சங்கம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட உள்ளது. இந்த பொருட்களின் மதிப்பு சுமார் 8 லட்சம் ஆகும். பணமாக 1 லட்சமாகும்.
இந்த பொருட்களை இன்று (12.8.2024) திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியிலிருந்து லாரி மூலம் ஏற்றி புறப்பட்டது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சர்
R.விசுவநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா. கலைநாதன் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள்
ஏஐடியூசி சார்பில் நன்றி.
ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் K.சேதுசெல்வம், ஏஐடியூசி நிர்வாகிகள் MS.சுப்பிரமணி, V. சிவகுருநாதன், APM.பாலா,
AP. தயாளன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிதி வசூல், பொருட்கள் திரட்டும் பணியில் ஈடுபட்ட பெரிய மார்க்கெட், சண்டே மார்க்கெட், சாலையோர வியாபார சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், நிதிப்பொருட்கள் வழங்கிய வியாபாரிகளுக்கும் ஏஐடியூசி புதுச்சேரி மாநில குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
K.சேதுசெல்வம்
ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர்