அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்
தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி தரம் தாழ்ந்து பேசி விமர்சனம் செய்த தமிழக அமைச்சர் திரு.அன்பரசன் அவர்களை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன மறியல் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக் கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது தமிழக அமைச்சர் அன்பரசனின் திருவுருவப்படத்தை கிழித்து எறிந்தும், தீயிட்டு கொளுத்தியும், அவரை பதவி நீக்கம் செய்ய கோரி அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளரிடம் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் பேசியதாவது,
மனித தெய்வங்களாக கழகப் பொதுச்செயலாளராக வணங்கப்படும், மக்களால் எக்காலத்திலும் போற்றப்படும் ஒப்பற்ற தலைவர்களான புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி தொண்டர்கள் மனம் நோகும் அளவில் கேலி செய்து அவதூராக பேசிய தமிழக திமுக அமைச்சர் திரு.அன்பரசன் அவர்களை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
மறைந்த தலைவர்களை பற்றி பிறர் மனம் நோகும் வண்ணம் பேசுவது அவர்களின் வக்கிர புத்தியின் செயலை வெளிப்படுத்துவதாகும். அரசியல் கட்சியை தற்போது துவக்கியுள்ள திரு.விஜய் பற்றி விமர்சனம் செய்வதாக இருந்தால் நேரடியாக அவரைப் பற்றி பேசுவது நல்ல அரசியல்வாதிக்கு அழகாகும். அதை விட்டுவிட்டு ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த எங்கள் புரட்சித்தலைவி அம்மா பற்றி கேவலப்படுத்தி பேசுவதும், அப்படி பேசிய ஜந்து தங்களை மெச்சி கொள்ள வேண்டும் என்பதற்காக அங்குள்ள திமுகவினர் கைதட்டி சிரிப்பது இவை எல்லாம் தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு ஏற்புடையதா? சினிமா நடிகர்களை தரம்தாழ்ந்து தற்போது பேசும் திமுகவினர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமலஹாசனை தங்களது பொய் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திகொண்டது ஏன்.
இப்படிப்பட்ட தரம் தாழ்ந்து பேசுவது தான் அவர்கள் அமைச்சர்களாக நீடிப்பதற்கான அளவுகோலாக திரு.ஸ்டாலின் வைத்துள்ளாரா? திமுக அமைச்சரின் இது போன்ற கேடுகெட்ட வார்த்தை ஜாலங்களை வாய்மூடி மௌனமாக தமிழகம் முதல்வர் இருப்பது ஒரு மாநில முதல்வருக்கு அழகல்ல.
மறைந்த தலைவர்களை பற்றி அனாகரிகமாக பேசிய திரு.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து தமிழக முதல்வர் நீக்க வேண்டும். அவ்வாறு நீக்க தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களால் முடியவில்லை என்றால் அமைச்சரின் அருவருக்கத்தக்க பேச்சின் செயலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கண்டன மறியல் ஆர்ப்பாட்டத்தில் மாநில கழக அவ்வைத் தலைவர் அன்பானந்தம் ,மாநில அம்மா பேரவை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ கோமலா, மாநில கழக இணைச் செயலாளர்கள் எஸ்.வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில கழக பொருளnளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் டி. குணசேகரன், எம். நாகமணி, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பி. குமுதன். புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், உழவர்கரை நகர செயலாளர் எஸ்.எஸ்.சித்தானந்தம், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, , மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம்,மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் , ,நகர கழக தலைவர்கள் செல்வகுமார், Dr.கணேஷ், சிவா, தொகுதி கழக செயலாளர்கள் , சிவகுமார், பாஸ்கர்,, துரை, கருணாநிதி, சம்பத், ராஜா, கமல்தாஸ், நடேசன், , கிருஷ்ணன், வேலவன், கோபால், குணசேகரன், தர்மலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், சிவராமராஜா, வெங்கடேசன், செந்தில்முருகன், நாக.லோகநாதன், மாநில எம் ஜிஆர் இளைஞர் அணி துணை தலைவர் குணாளன், துணை செயலாளர் பாக்கியராஜ், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பரசுராமன், இணை செயலாளர் கேசவன், துணை செயலாளர்கள் ராசு, யோகானந்தசாமி, மாநில மகளிர் அணி பொருளாளர் செந்திலரசி, உழவர்கரை நகர முன்னாள் துணை செயலாளர் விமலாஶ்ரீ, மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக், மாநில இலக்கிய அணி பொருளாளர் குணா,மாநில முன்னாள் மாணவரணி பொருளாளர் பார்த்தசாரதி முன்னாள் தொகுதி செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கருணாநிதி, தொகுதி கழக தலைவர்கள் காந்தி, சவுரிநாதன், மூர்த்தி, ஆறுமுகம், ராஜேந்திரன், கருணாநிதி, கண்ணன், சுரேஷ்குமார் மற்றும் இருதயராஜ், சுப்ரமணியன், சுதர்சன், ராமச்சந்திரன், செந்தில்குமார், தரணிதேவி, தமிழரசி உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.