ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
குறையாத வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னேறுங்கள் :
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பல தடைகள் வந்தாலும் மக்களின் உரிமைக்கு போராடும் உத்வேகத்தை அசைக்க முடியாது என நிரூபித்தவர் ஹேமந்த் சோரன். குறையாத வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னேற ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துகள்,”என்று தெரிவித்துள்ளார். அதே போல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில்,”ஜார்க்கண்ட் முதல்வர் ஸ்ரீ ஹேமந்த் சோரன் ஜிக்கு அவரது பிறந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துக்களும் நல்வாழ்த்துக்களும்.நாட்டின் ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளுக்கான போராட்டத்தில், அவர்களுக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் எதிராக, இந்தியா வலுவாகப் போராடும், ஒன்றாக நாம் வெற்றி பெறுவோம்.”இவ்வாறு தெரிவித்தார்.