வாகன ஓட்டிகள் பாதுகாப்பிற்காக பட்டாம்பி ஆற்றின் பாலத்தின் தார் டிரம்கள் அடுக்கி வைப்பு
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக பெய்து வந்த மழை காரணமாக பட்டாம்பி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியதில் பட்டாம்பி பாலத்தின் இரண்டு புறங்களிலுள்ள தடுப்புகள் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டது. தற்போது பட்டாம்பி ஆற்றுப்பாலத்தில் இருபுறங்களிலும் கைவரிசை தடுப்புக்கு பதிலாக டார் டின்கள் பாதுகாப்பாக அமைத்து ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
அதாவது குருவாயூர், குன்னம்குளம் பொன்னாணி, திருச்சூர் ஆகிய இடங்களிலிருந்து வருகின்ற வாகனங்கள் பட்டாம்பி பாலத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக ஒத்தப்பாலம், பட்டாம்பி, பாலக்காடு, வளாஞ்சேரி, மலப்புரம் ஆகிய இடங்களிலிருந்து செல்கின்ற வாகனங்கள் வெள்ளியாங்கல் பாலத்தின் வழியே அனுமதிக்கப் படுகிறது. பட்டாம்பி பாலத்தின் தடுப்புகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் வாகனப் போக்குவரத்து சிலநாட்கள் தடை செய்யப்பட்டது.