தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாவட்டத்தில் 1090 மாணவர்கள் பயன்

அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் நேற்று துவக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 14 கல்லூரிகளில் பயிலும் 1090 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் உயர்கல்வியை வளர்க்கும் நோக்கில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேரும் மாணவிகளுக்கு நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் கடந்த 2022ம் ஆண்டு தமிழக அரசால் துவக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மறு சீரமைக்கப்பட்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டமாக (புதுமை பெண் திட்டம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வழக்கமாக சேரும் மாணவிகளை விட கடந்த ஆண்டில் கூடுதலாக மாணவிகள் சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.