கருப்பு உடையை கண்டு ஆளுநர் அஞ்சுவது ஏன்? – த.பெ.தி.க.
கோவை தனியார் கல்லூரியில் ஆளுநர் பங்கேற்கும் விழாவில் கருப்புச் சட்டை அணிந்ததற்காக மாணவர்களுக்கு அனுமதி மறுத்ததற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கருப்பு உடையை கண்டு ஆளுநர் அஞ்சுவது ஏன்?. இது மாணவர்களுக்கான நிகழ்ச்சியா? உடைக்கான நிகழ்ச்சியா எனவும் த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.