பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை
பாலவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2023-ம் ஆண்டு சிபிஐ பதிந்த வழக்கின் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதியக் கோரி முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி வழக்கு தொடர்ந்திருந்தார்.