பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தினார். போர்ட்டோ ரிக்கோ வீரர் டாரியன் க்ரூஸை 13-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்றார். 33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்களுக்கான மல்யுத்தம் (ஆண்கள் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல்) நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் போட்டியில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் செஹ்ராவத், பியூர்டோரிகோவின் டேரியன் கிரஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் செஹ்ராவத் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் டேரியன் கிரஸை வீழ்த்தி வெண்கலப்பத்தக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக (1 வெள்ளி, 5 வெண்கலம்) உயர்ந்தது