ராசி பலன்கள்
🌴மேஷம்🦜🕊️
ஆகஸ்ட் 9, 2024
பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பூமி விருத்திக்கான சூழல் அமையும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மேம்படும். பொறாமை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்
அஸ்வினி : மதிப்புகள் அதிகரிக்கும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆதரவு மேம்படும்.
🌴ரிஷபம்🦜🐄
ஆகஸ்ட் 9, 2024
உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சிறுதொழில் செய்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். விளையாட்டு சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கற்பனை துறைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.
🌴மிதுனம்🦜🕊️
ஆகஸ்ட் 9, 2024
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.
திருவாதிரை : மனக்கசப்புகள் மறையும்.
புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
🌴கடகம்🦜🕊️
ஆகஸ்ட் 9, 2024
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூசம் : ஆதாயம் உண்டாகும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
🌴சிம்மம்🦜🕊️
ஆகஸ்ட் 9, 2024
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை மேம்படும். கொடுத்த வாக்குறுதிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மகம் : லாபங்கள் மேம்படும்.
பூரம் : அறிமுகம் உண்டாகும்.
உத்திரம் : தன்னம்பிக்கை ஏற்படும்.
🌴கன்னி🦜🕊️
ஆகஸ்ட் 9, 2024
சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கோப உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். வெளியூர் பயணங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : அனுபவம் உண்டாகும்.
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
🌴துலாம்🦜🕊️
ஆகஸ்ட் 9, 2024
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தொழில் நிமித்தமான பயணங்கள் கைகூடும். மறைமுகமான சில விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சித்திரை : புரிதல் உண்டாகும்.
சுவாதி : பயணங்கள் கைகூடும்.
விசாகம் : சிந்தனைகள் ஏற்படும்.
🌴விருச்சிகம்🦜🕊️
ஆகஸ்ட் 9, 2024
வெளியூர் பயண வாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைகளை வெற்றி கொள்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அனுஷம் : வெற்றிகரமான நாள்.
கேட்டை : துரிதம் உண்டாகும்.
🌴தனுசு🦜🕊️
ஆகஸ்ட் 9, 2024
விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்
மூலம் : மேன்மை ஏற்படும்.
பூராடம் : புதுமையான நாள்.
உத்திராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
🌴மகரம்🦜🕊️
ஆகஸ்ட் 9, 2024
வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் உண்டாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
உத்திராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : முடிவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : மனப்பக்குவம் உண்டாகும்.
🌴கும்பம்🦜🕊️
ஆகஸ்ட் 9, 2024
புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். எந்த ஒரு செயலிலும் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். கால்நடை சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
அவிட்டம் : விவேகம் வேண்டும்.
சதயம் : மாற்றம் ஏற்படும்.
பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.
🌴மீனம்🦜🕊️
ஆகஸ்ட் 9, 2024
உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழல் அமையும். எதிர்பாராத தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாதத் திறமைகள் மூலம் இழுபறியான காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். பகை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : பொறுப்புகள் குறையும்.
உத்திரட்டாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : நம்பிக்கை மேம்படும்.