மகத்தான வருமானம் தரும் மலைப்பூண்டு!

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதுபோன்ற அனைத்துப் பயிர்களும் எல்லா சீசன்களிலும் அங்கு பயிரிடப்படுகிறது. இந்த வகை காய்கறிகள் ஒவ்வொன்றும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணமே, அவை வளர்ந்த சீதோஷ்ண நிலைதான். இதை எல்லா இடத்திலும் பயிர் செய்திட முடியாது. கொடைக்கானல் போன்ற இடங்களில் விளைவித்து, அங்கிருந்து கொண்டு வர வேண்டும். இதற்கு நிறைய செலவு பிடிக்கும் என்பதால் விலையும் அதிகமாக வைக்கப்படுகிறது. அந்த வகையில் கொடைக்கானல் மலை மேல் விளையும் மலைப்பூண்டிற்கு இன்றைக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது. கொடைக்கானலில் அதிகமாக சிங்கப்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் பூண்டுதான் சாகுபடி செய்யப்படுகிறது. கொடைக்கானல் நகரத்தினைத் தவிர மலைகளைச் சுற்றி இருக்கும் வில்பட்டி, பூம்பாறை மற்றும் பூண்டி பஞ்சாயத்து களில் மலைப்பூண்டினை சாகுபடி செய்கிறார்கள். அந்தப்பூண்டுகளின் வரத்து தற்போது வெகுவாக குறைந்திருக்கிறது. இதற்கு பூண்டுகளை வளர்ப்பதற்கான விழிப்புணர்வு குறைவாக இருப்பதும் காரணம். மற்றொன்று பூண்டு சாகுபடியில் வேலைகள் அதிகம். கொடைக்கானல் மலையில் மட்டுமே பூண்டு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் கூட சாகுபடி செய்ய முடியவில்லை என்று அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பலரும் சொல்கிறார்கள். இதனால் பல விவசாயிகள் பூண்டு சாகுபடி செய்வது கிடையாது.

Leave a Reply

Your email address will not be published.