பள்ளத்தில் தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து
உத்திரமேரூர் அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். உத்திரமேரூர் அருகே தீட்டாளம், கோழியாளம், கடம்பூர், நெல்லி மற்றும் கம்மாளம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஊழியர்களை சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேனில் தினமும் ஏற்றி செல்கின்றனர்.
இதன்படி, இன்று அதிகாலை மேற்கண்ட பகுதிகளில் இருந்து 16 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன், கடம்பூரான்பொறடை பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கூச்சலிட்டனர்.
இந்த விபத்து பார்த்ததும் பொதுமக்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் வந்து வேனில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்டனர். இதனால் இந்த விபத்தில் சிலருக்கு மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அ