இந்திய வீராங்கனை வினேஷ்
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறினார். ஜப்பான் வீராங்கனையை 3-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வீழ்த்தினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்று அசத்தினர். துப்பாக்கிச் சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் கலக்கினர்.
இந்தியாவின் 124 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில், ஒரே விளையாட்டில் 3 பதக்கங்கள் வென்றது இதுவே முதல் முறையாகும். இந்த ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கிசுடுதலில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
இந்நிலையில் மல்யுத்த போட்டியில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் மற்றும் ஜப்பானின் யு சுசாகி ஆகியோர் மோதினார்.
இதில் வினேஷ் போகத் 3-2 என்ற கணக்கில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான யு சுசாகியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். யு சுசாகி 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது