தலையில் புண்ணா?
உடல் உஷ்ணத்தினால் சிலசமயம் தலையில் புண் ஏற்படுவதுண்டு. கீழாநெல்லி சமூலம், நிலவேம்பு, கருஞ் சீரகம், கசகசா, அருகம்புல் இவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து காயவைத்து சேர்த்து இடித்து, இப் பொடியை வெந்நீரில் குழைத்து தலைமுழுவதும் தாராளமாகத் தடவி அப்படியே கால்மணி நேரம் ஊறவைத்துப் பிறகு தலைமுழுகவும். சில நாட்களி லேயே தலைப்புண் சரியாகிவிடும்.