வயநாடு மீட்புப் பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்: வயநாடு ஆட்சியர்
வயநாடு மீட்புப் பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். பேரிடர் நிவாரண நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்பவர்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேவைக்கேற்ப அழைக்கப்படுவர். கூகுள் படிவ இணைப்பு மூலம் தன்னார்வ அணிகள் மீட்புப் பணிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.