பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி
வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. காலை 10:00 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,287.82 அல்லது 1.56% புள்ளிகள் சரிந்து 79.734.02 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 451.75 அல்லது 1.52% புள்ளிகள் சரிந்து 24,341.90 ஆக வர்த்தகமாகி வருகிறது.
வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிந்து வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் வரலாற்று உச்சம் தொட்டு வர்த்தகமான பங்குச்சந்தை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் கடும் சரிவடைந்துள்ளது. அமெரிக்க பொருளாதார நிலை, அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பின்மை நிலை மோசமடைந்தது, அந்நாட்டில் வேலையின்மை ரேட் 4.3 சதவிகிதம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா அகிய நாடுகளிலும் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. இது இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது.
பங்குச்சந்தையில் உள்ள எல்லா துறைகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை மற்றும் சன் ஃபார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிவுடனும் வர்த்தகமானது. இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலை 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,519.64 அல்லது 1.88% புள்ளிகள் சரிந்து 79,462.31 ஆகவும் நிஃப்டி 464.60 அல்லது 1.88 புள்ளிகள் சரிந்து 24,253.10 ஆகவும் வர்த்தகத்தை தொடங்கியது. சென்செக்ஸ் தொடந்து 1,600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிய நிலையில், இன்றைய நாளில் பங்குகளின் மதிப்பு ஏற்றம் காணுமா என்று கேள்வி எழுந்துள்ளது. சர்வேதேச அளவிலான பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு இந்தியாவிலும் எதிரொலிக்கிறது