சுகாதாரத்துறை அமைச்சர் வீணா எச்சரிக்கை

வயநாடு பேரழிவை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் அபாயம்:

வயநாடு பேரழிவை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 385-ஆக அதிகரித்துள்ளது. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 7வது நாளாக நடைபெற்று வருகிறது.

தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம், தன்னார்வலர்கள் உள்பட 1500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வயநாடு பேரழிவை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். வயநாடு மாவட்டத்தில் இதற்காக சுகாதாரத்துறையின் கீழ் மாவட்ட அளவிலான கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டுவந்து உடற்கூராய்வு செய்யும் இடத்தில் காவல்துறை, சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் மட்டுமே இருக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.