கைதுக்கு எதிரான கெஜ்ரிவால் மனு தள்ளுபடி
சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.