உளுந்தூர்பேட்டை நகராட்சி நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
உளுந்தூர்பேட்டை நகராட்சி நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார். அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, பொருட்கள் வினியோகம், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.