நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள 110 அடி

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள 110 அடி உயரம் கொண்ட பைகாரா அணை நிரம்பியது.

அணையிலிருந்து உபரி நீர் 3 மதகுகள் வழியாக வெளியேறி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்குருத்தி அணை நிரம்பி அங்கிருந்து உபரி நீர் பைகாராவுக்கு வருவதால் அணை நிரம்பி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பைகாரா அணை நிரம்பியதை அடுத்து 3 மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 3 மதகுகள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு பைக்காரா நீர்வீழ்ச்சி வழியாக மாயார் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மாயார் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.