திருவண்ணாமலை கோவில்களில் ஆடி பிரதோஷ வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் பழம்பேட்டை கடைத்தெருவில் அருள் பாலிக்கும் ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று ஆடி மாதம் பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகர பழம்பேட்டை வந்தவாசி சாலையில் அருள் பாலிக்கும் ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் இன்று ஆடி மாதம் பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் திரளாக பக்தர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தையொட்டி, நந்தி சிலைக்கு பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஆரணி சாலையில் அருள் பாலிக்கும் ஸ்ரீ அருணகிரிநாதர் திருக்கோயிலில் இன்று ஆடி மாதம் பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளாக பக்தர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ நீலவேணி அம்மன் திருக்கோவிலின்12 ஆம் ஆண்டு ஆடி ப்ரும்மோத்ஸவ விழாவின் ஏழாம் நாளான இன்று ஸ்ரீ நீலவேணி அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி ராஜ வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில் திரளான பக்தர்கள் விழா குழுவினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்