தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.8.2024) தலைமைச் செயலகத்தில், நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தணிக்கைத்துறைகளில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், உதவி ஆய்வாளர் மற்றும் உதவி தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 780 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.