கல்விக்காக உரிய நிதியை பாஜக அரசு ஒதுக்கவில்லை
மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பாஜக அரசு ஒதுக்கவில்லை என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவது மாநில அரசுகள்தான் என்று கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். ரயில் நிலையங்கள் உள்பட பல இடங்களில் இந்தி திணிப்பு, சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சி செய்வதாக கனிமொழி தமிழில் பேசினார்.