ஆடிப்பெருக்கு அன்று பத்திரபதிவுக்கு தமிழகஅரசு அனுமதி
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள் சனிக்கிழமை சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை அலுவலகங்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாள் ஆவணப் பதிவுக்கான கட்டணத்தை சேர்த்து வசூலிக்க பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.