வயிற்றுப் பூச்சிகள் வெளியேற வேண்டுமா?
வேப்பம்பூவைச் சுத்தமாகக் கழுவிவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவைத்தால் கஷாயம் கிடைக்கும். இதில் சர்க்கரை சேர்த்துத் தினசரி அரை தம்ளர் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளி யேறும். பித்தம் நீங்கும். வாதம் போகும். பசி எடுக்கும். உடம்பைத் தொற்றுநோய்கள் அணுகா. வேப்பம்பூ காப்பி என்று கிராமங்களில் இந்தப் பானத்தைக் குறிப்பிடுகிறார்கள்.