ராசி பலன்கள்
மேஷம்
ஆகஸ்ட் 2, 2024
வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். திட்டமிட்ட செயல்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான சில செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் மேம்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : மதிப்புகள் அதிகரிக்கும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆதாயம் மேம்படும்.
🌴ரிஷபம்🦜🐄
ஆகஸ்ட் 2, 2024
தனம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்களின் மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வஞ்சனையான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. வாத திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : சிந்தனைகள் ஏற்படும்.
ரோகிணி : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : நினைத்ததை முடிப்பீர்கள்.
🌴மிதுனம்🦜🕊️
ஆகஸ்ட் 2, 2024
வெளியிடங்களில் கோபத்தை விட விவேகத்தை கையாளவும். வியாபாரம் நிமித்தமான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பயனற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. புதுவிதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : விவேகத்தை கையாளவும்.
திருவாதிரை : பொறுமையுடன் செயல்படவும்.
புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.
🌴கடகம்🦜🕊️
ஆகஸ்ட் 2, 2024
மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ரகசியமான சில ஆராய்ச்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வேள்வி பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். கடன் செயல்களில் பொறுமை வேண்டும். முயற்சிக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். வாக்கு சாதுரியம் மூலம் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டுவந்த தனவரவுகள் கிடைக்கும். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பூசம் : ஈடுபாடுகள் உண்டாகும்.
ஆயில்யம் : தனவரவுகள் கிடைக்கும்.
🌴சிம்மம்🦜🕊️
ஆகஸ்ட் 2, 2024
எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுதிறன் மேம்படும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மகம் : ஆலோசனைகள் ஏற்படும்.
பூரம் : இழுபறிகள் மறையும்.
உத்திரம் : தீர்வுகள் கிடைக்கும்.
🌴கன்னி🦜🕊️
ஆகஸ்ட் 2, 2024
எதிர்பாராத சிலருடைய சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான தேடல்கள் அதிகரிக்கும். பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
உத்திரம் : மாற்றம் பிறக்கும்.
அஸ்தம் : இழுபறிகள் குறையும்.
சித்திரை : தேடல்கள் அதிகரிக்கும்.
🌴துலாம்🦜🕊️
ஆகஸ்ட் 2, 2024
ஆராய்ச்சி பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். நிர்வாகத் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புனித தலம் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். வியாபார முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : முடிவுகள் கிடைக்கும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : சிந்தித்து முடிவெடுக்கவும்.
🌴விருச்சிகம்🦜🕊️
ஆகஸ்ட் 2, 2024
வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வர்த்தக முதலீடுகளை குறைத்து கொள்வது நல்லது. தனம் தொடர்பான நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விளையாட்டான விவாதங்களை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.
கேட்டை : வாதங்களை தவிர்க்கவும்.
🌴தனுசு🦜🕊️
ஆகஸ்ட் 2, 2024
பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
மூலம் : மாற்றமான நாள்.
பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திராடம் : நெருக்கம் உண்டாகும்.
🌴மகரம்🦜🕊️
ஆகஸ்ட் 2, 2024
தனித்திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.
திருவோணம் : வெற்றிகரமான நாள்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
🌴கும்பம்🦜🕊️
ஆகஸ்ட் 2, 2024
பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அசையா சொத்துக்களில் ஈர்ப்பு உண்டாகும். வருமானம் குறித்த எண்ணம் மேம்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். வர்த்தகப் பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.
சதயம் : மந்தமான நாள்.
பூரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்.
🌴மீனம்🦜🕊️
ஆகஸ்ட் 2, 2024
சுரங்கப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வீடு மாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். தொழில் நிமித்தமான பயணங்கள் கைகூடும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஆர்வமின்மையான நாள்.
ரேவதி : மேன்மையான நாள்.