ராகுல் காந்தி ஆறுதல் வயநாடு
வயநாடு அருகே மேப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறிவருகிறார். நிலச்சரிவில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேப்பாடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பிரியங்கா காந்தியும் ஆறுதல் கூறினார். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்களை சந்தித்தும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆறுதல் கூறி வருகின்றனர்.