மஞ்சள் மருத்துவம்
மஞ்சள் ஒரு மசாலா பொருள் மட்டுமல்ல; மருந்துப் பொருளும் கூட. உடலில் காயம்பட்ட இடங்களில் அரிசி மாவுடன் மஞ்சளைக் கலந்து சூடுகாட்டிக் குழைத்து கட்டி வந்தால் நலம் பெறலாம். உடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும் சமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை பாலுடன் கலந்து பருகி குணமடையலாம். சொறி, படை, சிரங்கு சரியாக வேப்பிலையுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரியாகும். கண் எரிச்சல் தொடர்ந்தாற்போல் இருந்து கொண் டிருந்தால் மஞ்சள் பொடி, கசகசா இரண்டையும் எலுமிச்சைச் சாற்றில் கலந்து கொதிக்க வைத்து இறக்கி ஆறவைத்து, பிறகு அந்த நீர்க்கலவையை இமைகளில் பூசிக்கொண்டு படுக்கச் செல்ல வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கண் எரிச்சல் பறந்துவிடும்