இந்தியா-இலங்கை அணிகள் இடையே 3 போட்டி

இந்தியா-இலங்கை அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டி.20 தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக இரு அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டி கொழும்பில் நடைபெற உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியில் கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட் என அதிரடி பேட்டிங் வரிசை உள்ளது. ஷிவம்துபே, ரியான்பராக், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் என ஆல்ரவுண்டர்கள் இடையே ஆடும் லெவனில் இடம் பிடிக்க போட்டி உள்ளது.

பவுலிங்கில் சிராஜ், அர்ஷ்தீப் சிங், குல்தீப் இடம்பெறக்கூடும். மறுபுறம் இலங்கை அணி புது கேப்டன் சரித் அசலங்கா தலைமையில் களம் இறங்குகிறது. குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா, சதீரா சமரவிக்ரமா, அவிஷ்க பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் பவுலிங்கில் பதீரனா, தீக்ஷனா, ஹசரங்கா, தில்ஷான் மதுஷங்க, சாமிக்க கருணாரத்னே வலுசேர்ப்பர். இரு அணிகளும் இதுவரை 168 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 99ல் இந்தியா, 57ல் இலங்கை வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 11 போட்டி ரத்தாகி உள்ளது. நாளை இலங்கைக்கு எதிராக 100வது ஒருநாள் போட்டிக்கு இந்தியா தயாராகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.