நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை மாற்றி அமைக்க 8வது ஊதியக்குழு அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. 2014ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2016 முதல் அமல்படுத்தப்பட்டன.
அதன்படி, 2026ம் ஆண்டு 8வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும்