வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரள எம்.பி.க்கள்
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் கேரள எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்கு உடனே ரூ.5,000 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும் என்றும் கேரள எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்துள்ளது.