மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீரை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் குறுவை பயிர் சாகுபடி, ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் கடந்த 17 முதல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது