மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் இரங்கல்
வயநாட்டில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பது வருத்தத்திற்குரியது.. மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் இரங்கல்
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரளத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் மலைப் பிரதேசமான வயநாடு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் காயமடைந்து மீட்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். வயநாட்டில் நடந்திருப்பது மிகவும் துன்பமான நிகழ்வு. ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பது வருத்தத்திற்குரியது எனவும் ஜெகதீப் தன்கர் இரங்கல் தெரிவித்தார்.