மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி தகவல்
ஆகஸ்ட் 14ம் தேதி முதல் நீட் இளநிலை மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங் பணி தொடங்கும்:
வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் நீட் இளநிலை மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங் பணி தொடங்கும் என மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்துள்ளது. இதற்கான பதிவு நடைமுறை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. கவுன்சிலிங் தொடர்பான தகவல்களைப் பெற மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி இணையதளத்தை பார்க்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். “நாடு முழுவதும் உள்ள 710 மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 1.10 லட்சம் எம்பிபிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடைபெற உள்ளது. ஆயுஷ், நர்சிங் படிப்புகளை தவிர்த்து சுமார் 21,000 பிடிஎஸ் படிப்புக்கான சேர்க்கைக்கும் கவுன்சிலிங் நடைபெறும்” என தேசிய மருத்துவ ஆணைய செயலாளர் மற்றும் மருத்துவர் பி.ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.