நிதி ஒதுக்கி சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
அம்மா உணவகத்தை மேம்படுத்த ரூ.7.6 கோடி நிதி ஒதுக்கி சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
அம்மா உணவகத்தில் பழுதாகியுள்ள இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பாத்திரங்களை மாற்ற ரூ7.6 கோடி ஒதுக்கி சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் இதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவற்றை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கி இருந்தார்.