தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
வயநாட்டில் இன்றும் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது:
வயநாட்டில் இன்றும் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மலைப்பகுதியில் மட்டுமின்றி நிலப்பகுதியிலும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக நேற்று வயநாட்டில் 300 மி.மீ. மழை பதிவானது. மீட்புப் பணிகளுக்கு மழை தடையாகவே இருக்கும் என தெரிகிறது. அண்மையில் படிப்படியாக மழை குறைந்த நிலையில் திடீரென நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது என பிரதீப் ஜான் கூறினார்.