கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள்
கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
நெருக்கடியான நேரத்தில் கேரளாவுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது குறித்து வேதனை அடைந்தேன். முழு வீச்சில் நடைபெறும் மீட்புப் பணிகள் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற உதவும் என நம்புகிறேன். தளவாட மற்றும் மனிதவள ஆதரவை சகோதர மாநிலமான கேரளாவுக்கு வழங்க தயாராக இருக்கிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.