கனமழை எதிரொலி: கேரள மாநிலத்தில் உள்ள முதன்மை சுற்றுலாத் தலங்கள் மூடல்
திருவனந்தபுரம்: கனமழை பெய்து வருவதால் கேரள மாநிலத்தில் உள்ள முதன்மை சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, திரிச்சூர், வாழச்சல் சுற்றுலாத் தலங்களில் மக்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி வரை அனுமதியில்லை. அட்டப்பாடி, நெல்லியம்பதி சுற்றுலாத் தலங்கள், பாலக்காட்டில் உள்ள அருவிகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.