அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
சிங்கப்பூர் மெரினா நீர்த்தேக்கத்தை ஒட்டி அமைந்துள்ள தி கார்டன்ஸ் பை தி பே என்ற பூங்காவை பார்வையிட்டு அதன் பயன்பாடு குறித்துக் கேட்டறிந்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சிங்கப்பூர் நகரில் மெரினா நீர்த்தேக்கத்தை ஒட்டி 260 ஏக்கரில் அமைந்துள்ள தி கார்டன்ஸ் பை தி பே என்ற பூங்காவிற்கு வருகை புரிந்தார். இந்த பூங்காவில் உள்ள மூன்று நீர்முனை தோட்டங்களான மெரினா தெற்கில் உள்ள பே சவுத் கார்டன், மெரினா கிழக்கில் நிறுவனர்களின் நினைவகத்துடன் கூடிய பே ஈஸ்ட் கார்டன் மற்றும் டவுன் கோர் மற்றும் கல்லாங்கில் அமைந்துள்ள டே செண்ட்ரல் கார்டன் ஆகியவற்றிற்கு வருகை புரிந்து, அதன் சிறப்பம்சங்களை அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.