ஆவாரம் பூவின் மகத்துவம்
“ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ” என்ற பழமொழியின் மூலம் ஆவாரையின் மகத்துவத்தை அறியலாம்.
ஆவாரம் பூவைச் சமைத்துச் சாப்பிட கற்றாழை நாற்றம், நீரிழிவு, உடலில் உப்புப் பூத்தல், உடல் வறட்சி போன்றவை தீரும்.
பூவைக் குடிநீரிட்டு பாலுடன் உண்ண உடல் சூடு தணியும்.
பூவை மணப்பாகு செய்து சாப்பிட்டால் வெள்ளை, மூத்திரரோகம், ஆண்குறி எரிச்சல் இவை தீரும்.
ஆவாரை விதையை உரைத்துக் கண்களில் இட சீழ் பிடித்த கண் நோய்கள் தீரும்.
இப்பூவை 15 கிராம் அளவு எடுத்து டீ போட்டு அருந்தி வர உடல் வறட்சி, உடல் உஷ்ணம், உடல் நாற்றம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை தீரும். சர்க்கரை நோய் குறையும்.
ஆவாரம் பூவை சிகைக்காய், பாசிப்பயறு, கடலை மாவு போன்றவற்றுடன் சேர்த்து அரைத்து குளித்து வர தோல் நோய்கள் சரியாகும்.