ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்’ அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வோமா? தெரிந்துகொள்வோமா?
ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்’ அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வோமா? தெரிந்துகொள்வோமா?
‘ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்’ என்பது அனைவரும் அறிந்த ஒரு பழமொழி. ஆனால் ஆடிக்காற்றில் அம்மி நகருமா? ஆடி மாதத்தில் அதிவேகமாக காற்று அடித்தாலும் அம்மி இம்மி அளவுக்கும் நகராது.
இதற்கு வேறு பொருள் உண்டு. ஆடிக்கும் முன் மாதங்கள் கோடை வெயில் வீசும் மாதங்கள்.
சித்திரை, கத்திரி வெயில் என்பார்கள்.
அம்மாதங்களில் அடிக்கிற வெயிலின் தாக்கத்தால் பலருக்கு அம்மை நோய் வரும். ஆடியில் வரும் காற்றும், சாரல் மழையும் ,குளிர்ச்சியை ஏற்படுத்தி பூமியின் சூட்டை தணிக்கும்.