லிம்பிக் பதக்க வேட்டை நாளை ஆரம்பம்.! விழாக்கோலம் பூண்டது பாரிஸ்
உலகின் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைக்கும், விளையாட்டு உலகின் உச்சபட்ச நிகழ்ச்சியாக ஒலிம்பிக் திகழ்கிறது. கடந்த 1896ம் ஆண்டு நவீன ஒலிம்பிக் அறிமுகமானது. அதிலிருந்து ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி ஒட்டுமொத்த விளையாட்டு பிரியர்களும் பெரிதும் எதிர்பார்த்த 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று aகோலாகலமாக தொடங்குகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 பந்தயங்கள் நடக்கின்றன. வரும் 11ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது. 1900 மற்றும் 1924ம் ஆண்டுக்கு பின் இப்போட்டி பிரான்ஸ் நடத்துகிறது. 18 நாட்களில் 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.